இத்தாலி பள்ளிகளில் புர்கா, நிகாப் போன்ற முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை விதிக்க சட்ட முன்மொழிவு கொண்டுவரப்படும் என
பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். ஹிஜாப்புக்கு இதில் தடையில்லை. மேலும் வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கவும், அவர்களது பெற்றோர் இத்தாலிய மொழியைக் கற்கவும் நிபந்தனை விதிக்கப்பட உள்ளது. அமைச்சரவை, நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பின் இது அமலுக்கு வரும்.