ஜி7 மாநாட்டில் ஜெய்சங்கர்.. இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை

4535பார்த்தது
ஜி7 மாநாட்டில் ஜெய்சங்கர்.. இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை
கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் நவ.11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அதில், கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், அமெரிக்கா, சவூதி அரேபியா, உக்ரைன், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் வெளியுறவு பாதுகாப்புத் துறை அமைச்சருடனும் அவர் கலந்துரையாடினார்.

தொடர்புடைய செய்தி