பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் இன்று (ஜன.17) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் அடுத்தடுத்து வெளியேறி வெற்றிப் பெற்றன. அந்த காளைகளுக்கு தங்க காசு, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல், நடிகர் சூரியின் காளையும் வெற்றிப் பெற்று பரிசுகளை அள்ளிச்சென்றது.