நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை அணுகியுள்ளதால், நீதிமன்ற வழக்கை திரும்ப பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் பதிவுத்துறைக்கு கடிதம் அளித்துள்ளது. இது தொடர்பான முதல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் இன்னும் 20 நாட்களில் படத்தை மறு தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.