தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ படம் கடந்த ஏப்.9ஆம் தேதி இணையத்தில் கசிந்தது. இதுகுறித்து, பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உதவி எடிட்டர் பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ‘சைபர் கிரைம்' போலீசார் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.