பாலிவுட் திரையுலகில் இருந்து தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்து வரும் நடிகை ஜான்வி கபூர், அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுது. தீபக் ரெட்டி இயக்கவுள்ள இந்த புதிய திரைப்படத்தில் முதலில் ருக்மிணி வசந்த் நடிப்பதாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.