தவெக தலைவர்
விஜய் நடிப்பில் உருவான படம் ‘ஜனநாயகன்’. இந்த படம் கடந்த 9ஆம் தேதி இணையத்தில் லீக் ஆனது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் லீக் ஆனது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. தொடர்ந்து, ‘மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.