தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ படம் கடந்த 9ஆம் தேதி இணையத்தில் லீக் ஆனது. இந்நிலையில், ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் படத்தை பதிவிட்ட இணையதள, சமூக வலைதள பக்கங்களை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். டெலிகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை முடக்கிய போலீசார், படத்தை லீக் செய்த நபர்களை கண்டறியும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.