முதலமைச்சர்
விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ படம் ஜூன் 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. விஜயின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதால், அதற்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா புதிய அப்டேட் அளித்துள்ளார். அவர், “ஜனநாயகன் திரைப்படத்திற்கு எப்போது வேண்டுமானாலும் சென்சார் சான்றிதழ் கிடைக்கும். நாங்களும் அதற்காக காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.