ஜப்பான் பிரதமராக பதவியேற்ற பிறகு சனே தகாய்ச்சி முதன்முறையாக ஜூலை 1-ம் தேதி 3 நாள் அரசுமுறை பயணமாக
இந்தியா வரவுள்ளார். ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறும்
இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டில் அவர் கலந்துகொள்ள உள்ளதாகவும், இந்த பயணம் இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்த சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.