மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று (பிப்.24) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட்து வருகிறது. இதையொட்டி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த உறுதியான தலைவர் என ஜெயலலிதாவை போற்றிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள் தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் என கூறியுள்ளார்.