ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: திருவுருவ படத்திற்கு ஓபிஎஸ் மரியாதை

4005பார்த்தது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று (பிப்.24) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், தனது சொந்த ஊரிலேயே ஆதரவாளர்களுடன் இணைந்து அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நன்றி:பாலிமர்