மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் முதல்வரின் மக்கள் பணிகளை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.