கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, பாஜகவை முதன்முதலாக தனது கூட்டணியில் இணைத்து தமிழக அரசியலில் அக்கட்சிக்கு ஓர் அறிமுகத்தை கொடுத்தது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லாதபோதும், தேசிய அடையாளத்திற்காக ஜெயலலிதா இந்த முக்கிய முடிவை எடுத்தார். அந்த தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, மூன்றில் வெற்றி பெற்று தமிழகத்தில் தனது முதல் கணக்கை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.