ஜீப் இந்தியா நிறுவனம் ஜீப் மெரிடியன் டிராக் எடிஷன் SUV-யை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.35.95 லட்சம் முதல் ரூ.37.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). புதிய கிரில், 18-இன்ச் அலாய் வீல்கள், டூயல்-டோன் இன்டீரியர், 140மிமீ ஸ்லைடிங் இரண்டாம் வரிசை இருக்கை உள்ளிட்ட அப்டேட்கள் உள்ளன. 2.0 லிட்டர் டீசல் என்ஜின், 170 HP, 350 Nm டார்க், 9-ஸ்பீடு ஆட்டோமேடிக், FWD மற்றும் AWD ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.