நகை திருட்டு வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

39பார்த்தது
நகை திருட்டு வழக்கு: நீதிமன்றம் உத்தரவு
நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என்றால், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை, சட்டப்படி அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை விசாரணை நடத்தி கண்டுபிடிக்க திறமை மிக்க அதிகாரிகள் கொண்ட ஒரு சிறப்பு பிரிவை மாவட்டம் தோறும் அமைக்க வேண்டும் என்றும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஏடிஎஸ்பி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.