சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளரும், அண்மையில் ஞானபீட விருது பெற்றவருமான வினோத் குமார் சுக்லா (89), சுவாச கோளாறு காரணமாக ராய்ப்பூரில் இன்று (டிச.24) காலமானார். சாகித்ய அகாடமி மற்றும் சர்வதேச பென் விருதுகளை வென்ற இவர், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஞானபீட விருதை பெற்ற முதல் இலக்கியவாதி என்ற வரலாற்று பெருமைக்குரியவர் ஆவார். இவரது மறைவுக்குப்
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.