மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) 12,256 பணியிடங்களுக்கான CGL தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற, 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு கட்ட
கணினி வழித் தேர்வுகள் மூலம் தேர்வுகள் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாளாகும்.