தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலையில் தொடக்கம்

4136பார்த்தது
தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலையில் தொடக்கம்
தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆளுநர் அர்லேக்கர் உரையாற்றுவார். தொடர்ந்து, 2026-2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத்தொகை உயர்வு, இலவச கேஸ் சிலிண்டர், தாலிக்கு தங்கம் போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி