சவுக்கு சங்கருக்கு டிச.26 வரை நீதிமன்றக் காவல்.. நீதிபதி உத்தரவு

26பார்த்தது
சவுக்கு சங்கருக்கு டிச.26 வரை நீதிமன்றக் காவல்.. நீதிபதி உத்தரவு
சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி ரூ. 2 லட்சம் பணம் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நேற்று (டிச.13) சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, வருகிற 26 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அனிதா ஆனந்த் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி