சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சுக்கு ஜோதிமணி எம்பி எதிர்ப்பு

55பார்த்தது
சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சுக்கு ஜோதிமணி எம்பி எதிர்ப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.5) பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சி எம்பி-க்கள் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியதற்கு காங்., எம்.பி. ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நாங்கள் போராடுவோம், கேள்வி கேட்போம் என பயந்துகொண்டு பிரதமர் அவைக்கு வரவில்லை. சீன விவகாரத்தில் ராணுவத்தை கைவிட்டது, இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போன்ற விஷயங்களில் இருந்து தங்களை பாதுகாக்க இப்படி பொய் தகவலை பரப்புகிறார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி