கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசிறுவத்தூர் எம். ஜி. ஆர் நகர் பகுதியியை சேர்ந்த இளைஞர் கள்ளக்குறிச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். இளைஞரை ஏமப்பேர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் முகமது நவாஸ் பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.