கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் அவசர அவசரமாக திறக்கப்பட்ட புதிய புறநகர் பேருந்து நிலையத்தால், நகருக்குள் செல்ல வேண்டிய பயணிகள் சாமியார் மடம் பகுதியில் இறங்கி மாற்று பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பணிக்குச் செல்லும் பொதுமக்களும் மாணவர்களும் சிரமப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, புறநகர் பேருந்து நிலையத்தை பார்வையிட்ட வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., இனி அனைத்து டவுன் பேருந்துகளும் கள்ளக்குறிச்சி நகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்திற்கே இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.