கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதியில் தங்கிப் பயில விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 18ஆம் தேதி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 15ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தூர விதி பொருந்தாது. விடுதியில் சேரும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.