கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பஸ் ஸ்டாப் அருகே தனியார் திருமண மண்டபத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அஜித்குமார் (28) என்பவரின் பைக் கடந்த 1ம் தேதி திருடு போனது. இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.