சங்கராபுரம் அருகே பகண்டை கூட்ரோடில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், பதிவு எண் இல்லாத பைக்கில் சென்ற சுப்பராயலுவை (20) விசாரித்தபோது, திருவண்ணாமலை பகுதியில் திருடிய பைக் என தெரியவந்தது. அவரிடமிருந்து மேலும் 7 பைக்குகளை பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர்.