கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட தகவல் அறிந்த சின்னசேலம் சமூகநல விரிவாக அலுவலர் வேதவல்லி, விசாரணை நடத்தி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.