கள்ளக்குறிச்சி: தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்த 30 வயது நபர், தனது 8 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தாய் புகார் அளித்தார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.