அரகண்டநல்லூர் அடுத்த மனம்பூண்டி அரசு பணிமனையில் பயன்படுத்த முடியாத பேருந்துகளில் இருந்து பேட்டரிகளை திருடிச் சென்ற 4 பேர் பிடிபட்டனர். பிப்ரவரி 3ஆம் தேதி மாலை பணிமனை ஊழியர்கள் மர்ம நபர்களை துரத்திப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பணிமனை மேலாளர் அளித்த புகாரின் பேரில், அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி, பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, 5 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.