கள்ளக்குறிச்சி மாவட்டம் எம். குன்னத்தூர் மலை அருகே களமருதூர் சப் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நான்கு பேரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ் (25), அஜித் (20), வசந்த் (23), திருமலை (20) ஆகிய நான்கு இளைஞர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் பைக்கைப் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கஞ்சாவை எங்கிருந்து வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.