ஒரே பைக்கில் சென்ற நான்கு வாலிபர்கள் படுகாயம்

0பார்த்தது
ஒரே பைக்கில் சென்ற நான்கு வாலிபர்கள் படுகாயம்
கள்ளக்குறிச்சி அடுத்த மூரார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (20) மற்றும் அவரது நண்பர்களான பரமநத்தம் தாஸ் (18), மணிகண்டன் (18), தேவபாண்டலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோர் பைக்கில் ரோடுமாந்தூரில் நடந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றனர். அப்போது, அரிய பெருமானூர் அருகே சாலையின் தடுப்பு கட்டையில் மோதி பைக் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நால்வரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி