கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த முடியனூரில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்ற போது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையுடன் பூஜை செய்யும் மணியும் கண்டெடுக்கப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.