கள்ளக்குறிச்சியில் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் நாகராஜன் வீட்டில் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 30 ஆம் தேதி சேலத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. நாகராஜன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.