கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே, மாற்றுத்திறனாளிகள் 156 பேர், மாவட்ட தலைவர் வேலு தலைமையில் உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, டெல்லி போன்ற மாநிலங்களில் உயர்த்தப்பட்டதைப் போல் தமிழகத்திலும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக, போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.