சட்டசபை தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 425 0067 மற்றும் 04151-227001, 04151-227002, 04151-227003, 04151-227004 ஆகியவை செயல்படுகின்றன. மாவட்ட காவல் பார்வையாளர் அஜய் லிண்டா இந்த கட்டுப்பாட்டு அறைகளை நேரில் ஆய்வு செய்தார். தேர்தல் விதிமீறல்கள் மற்றும் பிற புகார்களை பொதுமக்கள் இந்த எண்களில் தெரிவிக்கலாம்.