கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 135 மனுக்களில், தவறான விவரங்கள் உள்ளிட்ட காரணங்களால் 55 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., வி.சி., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தற்போது மாவட்டத்தில் 80 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். உளுந்தூர்பேட்டையில் 18, ரிஷிவந்தியத்தில் 25, சங்கராபுரத்தில் 25, கள்ளக்குறிச்சியில் 12 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.