கள்ளக்குறிச்சி: ஊர் காவல்படை வீரர் மீது சகோதரர்கள் கொடூர தாக்குதல்

474பார்த்தது
கள்ளக்குறிச்சி: ஊர் காவல்படை வீரர் மீது சகோதரர்கள் கொடூர தாக்குதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, சீருடையில் பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஊர் காவல்படை வீரர் ராமகிருஷ்ணன், அவரது சகோதரர்களால் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டார். பூர்வீக நிலப் பிரச்சனை காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமகிருஷ்ணன் அடி தாங்க முடியாமல் தப்பியோட முயன்றபோது, அவரது சகோதரர்கள் துரத்திச் சென்று கற்களால் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி