வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கடம்பூர் கிராமத்தில் உள்ள கன்னிமார் கோயிலில், பூசாரி மா.கண்ணன் செவ்வாய்க்கிழமை இரவு பூஜை முடித்துவிட்டு சென்ற நிலையில், புதன்கிழமை காலை கோயிலுக்கு வந்து பார்த்தபோது இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பாலபந்தல் போலீஸார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.