சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான அரசம்பட்டு, போலப்பட்டு பகுதிகளில் நேற்று மாலை வீசிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழையால், மக்காச்சோளப் பயிர்கள் வேருடன் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்தன. அரசம்பட்டு கிராமத்தில் புளிய மரம் வேரோடு முறிந்து விழுந்ததில், விவசாயி முனியனின் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.