கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கொட்டமேடு
பகுதியைச் சேர்ந்த சந்திரலேகா(19) தனது 7 மாத குழந்தையுடன் வசித்து வந்தார். செல்போனில் காதல் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மனமுடைந்த அவர், குழந்தையை கிணற்றில் வீசி தானும் தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டனர். ஆனால் குழந்தை உயிரிழந்துவிட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் சந்திரலேகா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.