திருக்கோவிலூர்: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு

448பார்த்தது
திருக்கோவிலூர்: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு
திருக்கோவிலூர் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த பரத்ராஜ் (21) அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது, இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் பரத்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.