கள்ளக்குறிச்சி: பொங்கல் பரிசு தொகுப்பில் மண் அடுப்பு கோரிக்கை

63பார்த்தது
கள்ளக்குறிச்சி: பொங்கல் பரிசு தொகுப்பில் மண் அடுப்பு கோரிக்கை
விழுப்புரத்தில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தை பொங்கல் அன்று அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பில் மண் அடுப்பு மற்றும் மண் பாணையை இலவசமாக வழங்க வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் அழிந்து வரும் மண்பாண்டத் தொழில் வளர்ச்சி பெறும் என்றும், தமிழர் மரபு நிலைத்து நிற்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜய்யனார், மாவட்ட செயலாளர் S.வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி