கள்ளக்குறிச்சி துணைமின் நிலைய பகுதிகளில் நவம்பர் 15ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் இந்த மின் நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக செயற்பொறியாளர் கணேசன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். எனவே, இன்று நவம்பர் 15ஆம் தேதி மின் வினியோகம் வழக்கம்போல் செய்யப்படும்.