உளுந்தூர்பேட்டை அருகே தார் சாலையை கையால் பெயர்த்தெடுத்த பொதுமக்கள்

1பார்த்தது
உளுந்தூர்பேட்டை அருகே தார் சாலையை கையால் பெயர்த்தெடுத்த பொதுமக்கள்
உளுந்தூர்பேட்டை அருகே பல ஆண்டுகளாக மோசமான நிலையில் இருந்த சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்கத் தொடங்கினர். ஆனால், குண்டும் குழியுமான சாலையைச் சரிசெய்யாமல், மண்ணை அகற்றாமல் அதன் மீதே தார் கலந்த ஜல்லியை கொட்டி சாலை அமைத்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புதிதாகப் போடப்பட்ட சாலையை கையாலேயே பெயர்த்து எடுத்து, தார் கலவை ஒட்டாமல் மண் மேடாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஒப்பந்ததாரரின் அலட்சியத்தைக் கண்டித்துப் பணிகளை அதிரடியாகத் தடுத்து நிறுத்தினர்.

தொடர்புடைய செய்தி