கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் மத்திய அரசின் இ-நாம் திட்டம் 2018 மார்ச் 27 அன்று தொடங்கப்பட்டது. ஆனால், தரம் பிரிப்பு இயந்திரங்கள் போதிய இடவசதியின்றி ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் இ-நாம் சந்தைப்படுத்துதல் மூலம் பயனடைய முடியாமல் அவதிப்படுகின்றனர். புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் முடங்கிக் கிடக்கும் தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) மின்னணு வர்த்தக முறையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.