இன்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 2025-26-ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், இஆப, சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன், பாராளுமன்ற உறுப்பினர் தே. மலையரசன் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்.