கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சமையலறையில் திங்கள்கிழமை காலை நாகப்பாம்பு கண்டெடுக்கப்பட்டது. சமையலர்கள் அலறியதால், ஆசிரியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து, மறைந்திருந்த நாகப்பாம்பை உயிருடன் பிடித்து ரிஷிவந்தியம் வனப்பகுதியில் விட்டனர்.