கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில், அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், 139 கோடியே 41 லட்சம் மதிப்பில் 8 தளங்களுடன் 35.18 ஏக்கர் பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் நேற்று டிசம்பர் 1 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தார். மேலும், பணிகளை தரமாக மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.