திருக்கோவிலூா்: மாமியாரை வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மருமகன்

0பார்த்தது
திருக்கோவிலூா்: மாமியாரை வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மருமகன்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மாமியார் தே.அமிா்தவள்ளியை (60) கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் ப.தங்கதுரை (40) ஞாயிற்றுக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியை தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்ற தங்கதுரை, அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்து இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அமிா்தவள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி