கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்த மு.சிவா (36), தனது மகள் தனுஷா (7) மற்றும் உறவினர் மகன் நிவேந்திரன் (16) ஆகியோருடன் பைக்கில் சென்றபோது, கொங்கராபாளையம் அடுத்த பட்டி கிராமம் அருகே வந்த கார் மோதியதில் மூவரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வரஞ்சரம் போலீஸார், கார் ஓட்டுநர் ஏ.சுதீஷ் (22) மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.